இது சந்தோஷப்படுற விஷயமல்ல.
சங்கடப்படுத்தும் விஷயம். ‘ஒளிவட்டம்’ நம்மைச் சுற்றியிருந்தா…
அது நல்லதுதானே…அப்படின்னு நீங்க கேக்கலாம்.
ஆனா…இது நீங்க நெனைக்கிற ஒளிவட்டமல்ல…
உங்க உயிரைக் கேட்க வரும் ஒளிவட்டம்… உங்கள மட்டுமல்ல…
உலகத்துல இருக்கற அத்தனைபேரையும் பற்ற வருகிற ஒளிவட்டம்…
அதுயென்ன ஒளிவட்டம்னு ஒரே கன்பியூசா இருக்குல்ல…?
கொரோனாதாங்க அந்த ஒளிவட்டம்..
‘கொரோனா’ங்கறது இலத்தீன் வார்த்தையாம்.
இதுக்கு லத்தீன் மொழியில ‘கிரீடம்’, ‘மகுடம்’ அல்லது
‘ஒளிவட்டம்’ அப்படின்னு பொருளாம்….அதனாலதான்
இதுக்கு ‘கொரோனா’ ன்னு பெயரிட்டாங்களாம்…
நுண்ணோக்கிமூலம் இந்த வைரஸைப் பார்த்தபோது அது
இந்தத் தோற்றம் தெரிந்ததாம். அதைத் தான் நாமும் நாளிதழ்,
ஊடகம் மற்றும் பிறவகை விளம்பரங்கள்ல பார்த்து வருகிறோம்.
இதுக்குப் ‘பரிவட்ட நச்சுயிரி’ என்பது தமிழ்ப் பொருள்….
கோவிட் 19 என்பதில் உள்ள 19 என்பது கொரோனா
பரவத் தொடங்கிய 2019 ஆம் ஆண்டைக் குறிக்கிறது.
லண்டன்ல இருக்கற ICTV (International Committee
On Taxonomy Of Viruses) இன்டர்நேஷனல் கமிட்டி
ஆன் டேக்ஸானமி ஆஃப் வைரஸ் என்கிற அமைப்புதான்
இந்த வைரஸ்களுக்குப் பெயர் வைக்குது.
ஒரு வைரஸின் மரபுத் தன்மை, அதன் வளர்ச்சி ஆகியவற்றைக்
கொண்டே அதற்குப் பெயரிடுது. சிலநேரங்கள்ல வைரஸ்
தோன்றிய ஊர் அல்லது அதன் அடையாளத்தைக் குறிக்கும்
வகையில பெயர் வைக்கிறாங்க.
இப்படிப் பெயர் வைக்கிறதால பரிசோதனை, தடுப்பூசி, மருந்து
கண்டுபிடிக்கறது ரொம்ப ஈஸியா இருக்காம். வைரஸின் பெயர
மட்டுந்தான் இந்த ஐசிடிவி அமைப்பு தீர்மானிக்குது.
ஆனா, நோயோட பெயர உலக சுகாதார மையம் தான் முடிவுசெய்யுது.
;2019 நாவல் கொரோனா வைரஸ்’ என்பதுதான் ஆரம்பத்தில் இதற்கு
இட்ட பெயர். அப்படின்னா ‘புதுசா தோன்றிய கொரோனா’ன்னு அர்த்தம்.
ஆனா….’கோவிட்19’ அப்படின்னு பிரபலமாயிடுச்சு..
Severe Acute Respiratory Syndrome Coronavirus-2
(SARS-COV-2 ) என்றுதான் முதல்ல பெயர் இட்டாங்க…
மரபணு அடிப்படையில 2003ல தோன்றிய கொரோனாவைரஸ்
தொற்றால் ஏற்பட்ட சார்ஸ் (SARS) நோய்மாதிரியே இப்போதும்
இருக்கறதால SARS-COV-2ன்னு பெயரிட்டிருக்காங்க.
SARS-COV-2 மூலமாக ஏற்படுற இந்த நோய்க்கு கொரோனா
வைரஸ் அல்லது கோவிட்19 அப்படின்னு பெயரிட்டிருக்காங்க..
CORONA என்பதில் உள்ள சிஒ (CO) Virusங்கறதுல உள்ள விஐ
(VI) Diseaseங்கறதுல உள்ள டி (D) ஆகியவற்றை இணைச்சு
கோவிட் (COVID)ன்னு பெயர உருவாக்கியிருக்காங்க.
மொதன்மொதல்ல இந்த வைரஸ் 1960கள்ல பறவைகள், பாலூட்டிகள்ல
இருந்துதான் தோன்றிச்சாம். பாலூட்டிகளுக்கு வயித்துப்போக்கயும்
பறவைகளுக்கு சுவாசக் கோளாறையும் உண்டாக்கிச்சாம்.
பறவைகளுக்கு மாதிரி மனுஷங்களுக்கும் சுவாசக் கோளாறத்தான்
உண்டாக்குது இந்த புது வைரஸ்.
நிடோ வைரஸ் வரிசையில் கொரோன விரிடே என்னும் நோய்க்
குடும்பத்தில் ஆர்த்தோ கொரோன விரினே என்னும் துணைக்
குடும்பத்தைச் சேர்ந்தது இந்த வைரஸ்- ஆல்ஃபா கொரோனா
வைரஸ், பீட்டா கொரோனா வைரஸ், டெல்டா கொரானா வைரஸ்,
காமா கொரோனா வைரஸ் …அப்படினு நாலு வகையா இருக்காம்.
எத்தன வகையிருந்தா நமக்கென்னங்க….அதுபாட்டுக்கு இருந்துட்டு
போகட்டும்…நமக்கு வேண்டாம் இந்த ஒளிவட்டம்… நமக்கு வேண்டாம்
இந்தக் கிரீடம்…நமக்கு வேண்டாம் இந்தப் பரிவட்டம்….
நமக்குத் தேவை உயிர்ப் பாதுகாப்புதான்.. தனித்திருப்போம்
விழிப்புணர்வுடன் இருப்போம். பாதுகாப்பாக வாழ்வோம்.