மீன் என்றால் யாருக்கு தான் பிடிக்காது மீன்களில் குறைந்த அளவிலேயே கொழுப்புகள் உள்ளன. மற்றும் இதில் உயர் தரமான புரதங்கள் உள்ளன.
இதில் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள், வைட்டமின் டி மற்றும் வைட்டமின் பி 2 போன்ற வைட்டமின்கள் நிறைந்துள்ளன. மீன்கள் இரும்பு, துத்தநாகம், அயோடின், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் போன்ற தாதுக்களின் சிறந்த மூலமாகும். இது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கிறது என சொல்லப்படுகிறது.
ரசித்து ருசித்து மீனை சாப்பிட்டுக்கொண்டிருக்கும்பொழுது அந்த மீனில் இருக்கக்கூடிய முள்ளானது தொண்டையில் சிக்கிக்கொள்ளும் மீன் முள் சில நேரங்களில் கூர்மையான மற்றும் குறுகியதாக இருக்கும்,தெரியாமல் மீன் முள்ளை விழுங்கினாள் சளியில் இரத்தம்,அதிகப்படியான இருமல்,தொண்டையில்,அரிப்பு, வலி,உணவு விழுங்கும் போது வலி,தண்ணீர் குடிப்பதில் சிரமம்,கழுத்தின் அடிப்பகுதியில் கனம் போன்ற அறிகுறிகள் ஏற்படும் இதனை வெளியில் எடுக்க சத்தமாக இருமுவது,
பெரிய வாழைப்பழத்தை விழுங்குவது,இல்லையெனில் சோடா குடிக்கலாம் இந்த சோடா வயிற்றில் உள்ள மீன் முள்ளைக் கரைக்கும் தன்மை கொண்டதென சொல்லப்படுகிறது.ரொட்டியை சில நொடிகள் தண்ணீரில் ஊறவைத்து சபிவேண்டுமாம் அடுத்ததாக 1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெயைக் குடிப்பது ,குழம்பு சேர்க்காமல் வெறும் சாதம் சாப்பிட்டாலும் முள் போய்விடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.