கார் அளவு இதயம் கொண்ட விலங்கு எது தெரியுமா?

378
Advertisement

ஆண்களின் இதயம் 300 கிராம் முதல் 350 கிராம்வரை
எடைகொண்டதாகவும், பெண்களின் இதயம் 250 கிராம்
முதல் 300 கிராம்வரை எடைகொண்டதாகவும் இருக்குமென்று
மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஆனால், நீலத்திமிங்கலத்தின் இதயம் கார் அளவு பெரியதாக
இருக்கிறது. இந்த இதயத்தின் எடை 600 கிலோ எடைகொண்டது.
விலங்குகளில் நீலத்திமிங்கலம்தான் மிகப்பெரியது. 75 வகையான
நீலத்திமிங்கலங்கள் உள்ளன என்று கண்டறிந்துள்ளனர்.

சராசரியாக 80 அடிமுதல் 100 அடிவரை நீளம்கொண்டவை
நீலத்திமிங்கலம். இதன் ரத்தத் குழாய்கள் மனிதன் நீந்திச்
செல்லும் அளவுக்கு மிகப்பெரியவை.

இதன் நாக்கின் எடை எவ்வளவு தெரியுமா?

3 டன்….

அதாவது, மூவாயிரம் கிலோ.

இதன் உடம்பின் மொத்த எடை எவ்வளவு தெரியுமா?

ஒன்றரை டன்.

அதாவது, ஒரு லட்சத்து 50 கிலோ இருக்கும். இதற்குமேல்
எடைகொண்ட நீலத்திமிங்கலங்களும் உள்ளன.

உலகிலுள்ள அனைத்துக் கடல்களிலும் இவை வசிக்கின்றன.
80 முதல் 90 வருடங்கள் ஆயுள்கொண்டவை நீலத்திமிங்கலங்கள்.

ஒருமுறை ஒரு குட்டி மட்டுமே ஈணும். பிறக்கும்போது அந்தக்
குட்டித் திமிங்கலம் 2 டன் எடை இருக்கும். பிறந்தலிலிருந்து
ஏழு மாதங்கள்வரை தினமும் 400 லிட்டர் பால் குடிக்கும்.

ஒரு நீலத்திமிங்கலம் சராசரியாக 3 ஆயிரத்து 600 கிலோ
உணவை உண்ணும். கிரில் என்னும் மீன்களை நீலத்திமிங்
கலங்கள் உணவாகக்கொள்கின்றன.

கடலில் வாழும் அரக்கர் என்று நீலத்திமிங்கலத்தை அழைக்கின்றனர்
கடலியலாளர்கள்.