இனிமேல் அமெரிக்காவில் வேலைக்குச் செல்லும் வெளிநாட்டினர் H-1B விசா பெற ஆண்டுதோறும் ரூ. 88 லட்சம் செலுத்த வேண்டும் என டிரம்ப் அரசு சமீபத்தில் உத்தரவிட்டது.
தொடர்ந்து H-1B விசா தொடரான பல புதிய விதிகளும் அறிவிக்கப்பட்டன. இந்தக் கட்டண உயர்வு, அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை நியமிப்பதற்குப் பதிலாக, அமெரிக்கப் பணியாளர்களை அதிக அளவில் வேலைக்கு அமர்த்த ஊக்குவிக்கும் என டிரம்ப் நிர்வாகம் வட்டாரங்கள் தெரிவிக்கிறது.
இந்த நிறுவனங்களுக்கு இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான உயர் திறன்கொண்ட ஊழியர்களைப் பணியமர்த்த இந்த H-1B திட்டம் உதவுகிறது. அதிலும் குறிப்பாக, ஒவ்வொரு ஆண்டும் அனுமதிக்கப்பட்ட H-1B விண்ணப்பங்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானவை இந்தியர்களுக்கே கிடைத்துள்ளன.
இந்த நிலையில் டிரம்ப் அரசு கொண்டுவந்துள்ள கட்டண உயர்வு இந்தியர்களுக்கும் அவர்களை பணியமர்த்தும் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் பெரும் பாதிப்பாக அமையும் என்று எதிர்பாக்கப்பட்ட நிலையில் தற்போது அமெரிக்க முக்கிய மாற்றங்கள் கொண்டுவருகிறது.
தற்போது H-1B விசா புதிய விதிமுறைகள் பார்க்கலாம்!!
*புதிய H-1B விசா மனுக்களுக்கான கட்டணம் தற்போதுள்ள சுமார் ரூ. 88 லட்சம் என உயர்த்தப்படுகிறது.இருப்பினும், இந்தப் புதிய கட்டணம் புதிய விண்ணப்பங்களுக்கு மட்டுமே பொருந்தும்.
விசா புதுப்பித்தல் அல்லது ஏற்கெனவே விசா வைத்திருப்பவர்களுக்குப் பொருந்தாது என அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.
*விசா பெறுவதற்கான சிறப்புத் தொழில் அதாவது, Specialty Occupation என்ற வரையறை கடுமையாக்கப்பட்டுள்ளது. இனிமேல், விண்ணப்பதாரரின் பட்டப்படிப்பும், அவர்கள் செய்யும் வேலையும் கண்டிப்பாக ஒரே துறை சார்ந்ததாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது
*புதிய விதிமுறைகளின்படி H-1B ஊழியர்களைப் பிற நிறுவனங்களில் பணிக்கு தேர்வு செய்து அனுப்பும் கன்சல்டிங்{consulting} மற்றும் அவுட்சோர்சிங்{outsourcing} நிறுவனங்கள் கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்படும் ஏறும் தெரிவித்துள்ளது.
*ஊழியர்கள் அவர்கள் பணி செய்யும் நிறுவனங்களுடன் நேரடி தொடர்பு இருக்கின்றனரா அல்லது மூன்றாவது ஏஜென்சி மூலம் காண்டிராக்ட்-இல் இருக்கிறார்களா என்பது குறித்த கூடுதல் ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
*பல்கலைக்கழகங்கள், இலாப நோக்கற்ற ஆய்வு நிறுவனங்கள் மற்றும் சுகாதார நிறுவனங்கள் போன்ற வருடாந்திர விசா ஒதுக்கீட்டு உச்சவரம்பில் இருந்து விலக்கு பெறும் நிறுவனங்களின் பட்டியலை டிரம்ப் நிர்வாகம் மறுபரிசீலனை செய்ய திட்டமிட்டுள்ளது.
- மேலும், நிரந்தரக் குடியுரிமைக்கான கிரீன் கார்டு செயல்முறையும் கடினமாக்கப்பட்டுள்ளது.
அபரிமிதமான திறன் கொண்ட வெளிநாட்டு நிபுணர்களை பணியமர்த்தும் O-1A விசா முறையில் கட்டுப்பாடுகளை விதிக்கவும் திட்டமிட்டுள்ள்ளது.
இந்த திட்டங்கள்கள் தற்போது பொதுமக்கள் கருத்துக்காக வைக்கப்பட்டுள்ளது. இவை செயல்படுத்தப்பட்டால், அமெரிக்கப் பணிக்கான விசா அமைப்பில் ஏற்பட்ட மிகப்பெரிய மறுசீரமைப்பாக இருக்கும். பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டும் என்ன தான் நடக்கப்போகிறது என்று!!
