Wednesday, December 17, 2025

IPL கோப்பை ‘மதிப்பு’ தெரியுமா? வெளியான ‘சுவாரஸ்ய’ தகவல்

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் தொடர்களில் ஒன்றான IPL தொடர், நடப்பாண்டு மிகப்பெரும் துயரத்தில் முடிந்துள்ளது. 18 ஆண்டுகள் கழித்து King கோலியின், RCB கோப்பையை வென்று வரலாற்று சாதனை படைத்தது. அந்த மகிழ்ச்சி முடிவதற்குள் வெற்றி பேரணியில் சிக்கி, 11 ரசிகர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதனால் கோப்பை வென்ற மகிழ்ச்சியை முழுக்க அனுபவிக்க முடியாமல், அடுத்தடுத்த பிரச்சினைகளை RCB சந்தித்து வருகிறது. இந்தநிலையில் அணிகளுக்கு வழங்கப்படும் IPL கோப்பை ஒரிஜினலா? இல்லை போலியா? என்ற கேள்வி சமூக வலைதளங்களில் அலசி ஆராயப்பட்டு வருகிறது. உண்மை என்னவென்பதை இங்கே பார்க்கலாம்.

IPL தொடரைப் பொறுத்தவரை கோப்பை வெல்லும் அணிக்கு, ஒரிஜினல் கோப்பை தான் வழங்கப்படும். பின்னர் கொண்டாட்ட நிகழ்வுகள் முடிந்ததும் அதை திரும்பப் பெற்றுக்கொண்டு, போலியான கோப்பையை வெற்றி பெற்ற அணிக்கு IPL நிர்வாகம் வழங்குகிறது. ஒரிஜினல் கோப்பையில் இதுவரை வென்ற அணிகளின் பெயர் இடம்பெற்று இருக்கும்.

தங்கம், வெள்ளி, அலுமினியம் மற்றும் சில உலோகங்களை சேர்த்து, ஒரிஜினல் IPL கோப்பை தயாரிக்கப்பட்டு இருக்கிறது. இதன் மதிப்பு சுமார் 50 லட்சம் ரூபாய் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Related News

Latest News