செப்டம்பர் மாத வங்கி காலண்டர் இதோ: 16 நாட்கள் விடுமுறை

செப்டம்பர் மாதம் தொடங்க இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், வங்கி வாடிக்கையாளர்கள் தங்களது பணப் பரிவர்த்தனைகளை முன்கூட்டியே திட்டமிடுவது அவசியமாகியுள்ளது. ரிசர்வ் வங்கி அறிவிப்பின்படி, வார இறுதி நாட்கள் மற்றும் மாநில வாரியான பண்டிகை, பொது விடுமுறைகள் உள்ளிட்டவற்றை சேர்த்து செப்டம்பர் மாதத்தில் மொத்தம் 16 நாட்கள் வங்கிகள் இயங்காது. இருப்பினும், இந்த விடுமுறை நாட்கள் அனைத்து மாநிலங்களுக்கும் ஒரே மாதிரியாக இருக்காது.

செப்டம்பர் 4-ம் தேதி ஜன்மாஷ்டமியை முன்னிட்டு தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் வங்கிகள் மூடப்படும். செப்டம்பர் 11-ம் தேதி ஜெய்ப்பூரில் நடைபெறும் தேர்தலை முன்னிட்டு வங்கி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 12-ம் தேதி அசாமில் ஸ்ரீமந்த சங்கரதேவரின் திருபாவ திதியை முன்னிட்டு வங்கிகள் இயங்காது.

செப்டம்பர் 14-ம் தேதி விநாயகர் சதுர்த்தி உள்ளிட்ட பண்டிகைகளை முன்னிட்டு தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கர்நாடகா உள்ளிட்ட பல மாநிலங்களில் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. செப்டம்பர் 15-ம் தேதி குஜராத் மற்றும் ஒடிசாவில் பண்டிகைகளை முன்னிட்டு வங்கிகள் மூடப்படும்.

மேலும், செப்டம்பர் 21 முதல் 25-ம் தேதி வரை அசாம், கேரளா, ஜார்க்கண்ட், ஜம்மு-காஷ்மீர், சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு காரணங்களுக்காக வங்கி விடுமுறைகள் உள்ளன.

இதுதவிர, அனைத்து மாநிலங்களிலும் ஞாயிற்றுக்கிழமைகள் மற்றும் மாதத்தின் இரண்டாவது, நான்காவது சனிக்கிழமைகளில் வங்கிகள் வழக்கம்போல் இயங்காது. விடுமுறை நாட்களிலும் ஏடிஎம், யுபிஐ, இணைய வங்கி மற்றும் மொபைல் வங்கி சேவைகளை வாடிக்கையாளர்கள் தொடர்ந்து பயன்படுத்தலாம்.

Related News

Latest News