திமுக பொருளாளர் டி.ஆர்.பாலுவின் மனைவி ரேணுகா தேவி (80) உடல்நலக்குறைவு காரணமாக இன்று காலமானார்.
நுரையீரல் பாதிப்புக்காக கடந்த 8 மாதங்களாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். அவரது மறைவு திமுக வட்டாரத்தில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.