தமிழக சட்டமன்ற தேர்தலில் தி.மு.க. தோல்வியடைந்து ஆட்சி அதிகாரத்தை இழந்த நிலையில், தி.மு.க. கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி கழன்று த.வெ.க. ஆட்சியமைக்க கை கொடுத்தது. இதனால் தேசியளவில் காங்கிரஸ் கட்சி அங்கம் வகிக்கும் ‘இந்தியா’ கூட்டணியில் தி.மு.க. நீடிக்காது என்கிற நிலை ஏற்பட்டுள்ளது.டெல்லியில் வருகிற 8-ந்தேதி நடைபெறும் இந்தியா கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்குமாறு தி.மு.க.வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் காங்கிரஸ் கட்சி கலந்துகொள்ளும் இந்த கூட்டத்தில் தி.மு.க. பங்கேற்காது என்று அறிவித்துள்ளது.
இதன் மூலம் இந்தியா கூட்டணியில் இருந்து திமுகவும் விலகுவது உறுதியாகி உள்ளது. இந்தியா கூட்டணி உருவாக காரணமாக இருந்த நிதீஷ்குமார், சந்திரபாபு நாயுடு ஆகியோர் தான் இப்போது மத்தியில் பாஜக ஆட்சியில் இருக்கவே காரணமாக இருக்கிறார்கள்.2026 சட்டமன்ற தேர்தல்களில் பாஜகவை யார் எல்லாம் கடுமையாக எதிர்த்து அரசியல் செய்தார்களோ அத்தனை பேரும் கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளார்கள். தமிழ்நாட்டில் ஸ்டாலின், கேரளாவில் பினராயி விஜயன், மேற்கு வங்கத்தில் மம்தா பானர்ஜி என 3 பேரும் ஒரே நாளில் வீழ்ந்துள்ளனர்.
அதில் குறிப்பாக ஸ்டாலின் ராகுல் காந்தியை பிரதமராக வேண்டும் என்று 2024ல் கடுமையாக உழைத்தார். தமிழ்நாடு, புதுச்சேரி என 40க்கு 40 இடங்களையும் வெல்ல வைத்தார். ஆனால் அவரிடம் ஒரு வார்த்தை கூட சொல்லாமல் ஜெயித்தே மறுநாளே தவெக பக்கம் போனதை திமுகவால் ஜீரணிக்க முடியவில்லை. இதனால் திமுக காங்கிரஸ் கட்சிக்கு எதிரான நிலைப்பாட்டையே எடுக்கும். அப்படி எடுக்கும் அதேநேரம் பாஜகவிற்கு சாதகமாகவே முடியும் என எதிர்பாக்கப்படுகிறது
