மத்திய அரசு கொண்டுவந்துள்ள மும்மொழிக் கொள்கையை தமிழக அரசு கடுமையாக எதிர்த்து வருகிறது. இன்று காலை பொள்ளாச்சி ரயில் நிலையத்தில் பெயர் பலகையில் உள்ள இந்தி எழுத்துக்களை திமுகவினர் தார்பூசி அழித்தனர். இது தொடர்பாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ரயில் நிலையத்தில் உள்ள பெயர் பலகையில் இந்தியை கருப்பு மை பூசி அழித்து, தமிழ் வாழ்க என எழுதியுள்ளனர்.