செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரியில் திமுக சார்பில், பொதுக் கூட்டங்கள் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.
அப்பொழுது பேசிய அமைச்சர் அன்பரசன் : தமிழ், ஆங்கிலம் இரு மொழி கொள்கையை கொண்டு வந்தவர் அண்ணா. தமிழ், ஆங்கிலம் படித்தவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். இந்தி படித்தவர்கள் எங்க இருக்கான் தெரியுமா எங்க வீட்டில மாடு மேய்க்கிறான். பொய் சொல்லவில்லை, உண்மையிலேயே மாடுதான் மேய்த்துக் கொண்டிருக்கிறான்.” என பேசியுள்ளார்.