ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில், திமுக வெற்றியை உறுதி செய்திருக்கும் சூழலில், சென்னை, அண்ணா அறிவாலயத்தில் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில், தன்னை எதிர்த்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை விட, திமுக வேட்பாளர் சந்திரகுமார் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறார். இதனையொட்டி, சென்னையில் உள்ள திமுக தலைமை அலுவலகமான அண்ணா அறிவாலயத்தில், திமுக தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் வெற்றியைக் கொண்டாடி வருகின்றனர்.