Thursday, February 19, 2026

மாநிலங்களவை தேர்தலுக்கு தி.மு.க., வேட்பாளர்கள் வேட்பு மனு தாக்கல்

மாநிலங்களவை தேர்தலுக்கு தி.மு.க., வேட்பாளர்கள் வில்சன், சல்மா, சிவலிங்கம் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர். திமுக கூட்டணியில் ம.நீ.ம., தலைவர் கமல்ஹாசனும் வேட்பு மனு தாக்கல் செய்தார்.

தமிழகத்தில் 6 மாநிலங்களவை எம்.பி. பதவிகளுக்கு வரும் ஜூன் 19ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் வில்சன், சல்மா, சிவலிங்கம் ஆகியோர், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் இன்று வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

திமுக. கூட்டணியில் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசனும் வேட்பு மனு தாக்கல் செய்தார். தலைமைச் செயலகத்தில் சட்டமன்ற பேரவை செயலக கூடுதல் செயலாளரும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான பா.சுப்பிரமணியத்திடம் வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். வேட்புமனு தாக்கலின்போது கூட்டணி கட்சி தலைவர்கள், மூத்த அமைச்சர்கள், திமுக முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Related News

Latest News