கரூரில் அடிப்படை வசதிகள் இல்லை என முறையிட்ட பொதுமக்களை, திமுக கிளை செயலாளர் திட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கரூர் மாவட்டத்தில் உள்ள திருமாநினலயூர் முதல் கிழக்கு தெருவில் எந்த ஒரு அடிப்படை வசதிகளும் இல்லை என கூறப்படுகிறது. சாக்கடை அமைக்காமல் சாலை போடுவதால், கழிவுநீர் தேங்குவதாக அப்பகுதியினர் குற்றச்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து 36 வது வார்டு திமுக கிளைச் செயலாளர் செல்வராஜுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்பொழுது பொதுமக்களை செல்வராஜ் தகாத வார்த்தைகளால் திட்டியதாக
கூறப்படுகிறது.