Tuesday, October 7, 2025

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவின் தாயார் காலமானார்

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதாவின் தாயார் அம்சவேணி செவ்வாய்க்கிழமை காலமானார். அவருக்கு வயது 83.

வயது மூப்புக் காரணமாக ஏற்பட்ட உடல்நல பிரச்சனையால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த சில நாட்களாக சிகிச்சை பெற்று வந்துள்ளார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை உயிரிழந்தார். இந்த தகவலை பிரேமலதாவின் சகோதரர் எல்.கே. சுதீஷ் தெரிவித்துள்ளார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News

Latest News