தீபாவளி பண்டிகை இந்த ஆண்டு அக்டோபர் மாதம் 20-ந்தேதி கொண்டாடப்படுகிறது. வெளியூரில் வசிப்பவர்கள் தீபாவளி பண்டிகையை கொண்டாடுவதற்காக தங்களது சொந்த ஊருக்கு செல்வார்கள். இதற்காக சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்படும்.
இந்நிலையில் தீபாவளி பண்டிகைக்கான ரெயில் டிக்கெட் முன்பதிவு தொடங்கிய சில நிமிடங்களிலேயே டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்தன.