Wednesday, July 16, 2025

மனைவியிடமிருந்து விவாகரத்து : 40 லிட்டர் பாலில் குளித்து கொண்டாடிய கணவன்

அசாம் மாநிலம் நல்பாரி மாவட்டத்தை சேர்ந்தவர் மாணிக் அலி (32). இவரது மனைவி திருமணத்துக்கு புறம்பான உறவில் இருந்துள்ளார். மேலும் 2 முறை வீட்டை விட்டு ஓடியுள்ளார். திரும்பி வந்த மனைவியை தனது மகளுக்காக மன்னித்து அவருடன் வாழ்ந்து வந்துள்ளார் மாணிக் அலி.

இருப்பினும் கணவன் – மனைவி இடையே அடிக்கடி சண்டை நடந்துள்ளது. இதையடுத்து விவாகரத்துக்கான சட்டப்பூர்வ உதவியை நாடினர். சில நாட்களுக்கு முன்பு அவர்களுக்கு விவாகரத்து சட்டபூர்வமாக வழங்கப்பட்டது.

இந்நிலையில் மாணிக் அலி, 40 லிட்டர் பாலை நிரப்பி அதில் குளித்து, ”இன்றுமுதல் நான் விடுதலையாகி விட்டேன்” என்று அறிவித்து தனது விவாகரத்தை கொண்டாடியுள்ளார். இது குறித்த வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Latest news