சிறுமியை  கடித்து பாம்பு உயிரிழந்ததா ? வெளிவந்தது உண்மை !

41
Advertisement

சில தினங்களுக்கு முன் பீகார் மாநிலத்தில் விளையாடிக்கொண்டு இருந்த குழந்தையை பாம்பு ஒன்று கடிதத்தில் பாம்பு உயிரிழந்துவிட்டதாக வீடியோ ஒன்று வைரலாகியது.இதற்கிடையில் தற்போது இந்த விவகாரத்தில் மறைந்திருக்கும் உண்மை வெளிப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தில்,பாம்பு கடித்ததாக கூறப்படும் குழந்தைக்கு சிகிச்சை அளித்த மருத்துவரே தற்போது இந்த மர்மத்திற்கு விளக்கம் அளித்துள்ளார்.அவர் கூறுகையில், 

உண்மையில் அந்த பாம்பு குழந்தையை கண்டிக்கவில்லை. மாறாக குடியிருப்பாளர்கள் பாம்பை குச்சிகளால் அடித்துக் கொன்றிருக்கலாம், அதை மறைக்க பாம்பு தானாக இறந்ததாக கூறிருக்கலாம்.இந்த விவகாரம் தொடர்பாக மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் தகவல் கிடைத்தவுடன் அறிக்கை சம்பர்ப்பிக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

Advertisement

இதிலிருந்து, 4 வயது குழந்தையின்  காலில் பாம்பு கடித்ததாக கூறப்படுவது முற்றிலும் தவறானது.எனினும், பாம்பு உயிரிழந்துள்ளது ஆனால் அதற்கான காரணம் இதுவரை தெரியவில்லை.