சென்னையில் மெட்ரோ ரயிலை மக்கள் அதிகளவு பயன்படுத்தி வருகின்றனர். தினமும் 3.25 லட்சம் பேர் பயணம் செய்கிறார்கள். 2 வழித்தடங்கள் மூலம் மெட்ரோ ரெயில்கள் தற்போது இயக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில் சுதந்திர தினமான நேற்று ஒரு நாளில் மட்டும் 4,06,066 பேர் பயணம் செய்துள்ளனர். இது மெட்ரோவில் ஒரு நாளில் பயணம் செய்தவர்களின் அதிகபட்ச எண்ணிக்கை ஆகும்.
இதற்கு முன்பு, கடந்த அக்டோபரில் சென்னையில் நடைபெற்ற விமான படை சாகச நிகழ்ச்சியை மக்கள் காண வந்தபோது, மெட்ரோவில் மட்டும் 4 லட்சம் பேர் பயணம் செய்ததே அதிகபட்சமாக இருந்தது.