ஜெர்சி எண் 7 “ன் ரகசியம் இதுதான் … மனம் திறந்த டோனி

212
Advertisement

மார்ச் 26ம் தேதி ஐபிஎல் தொடரின் 15-வது சீசனின் முதல் போட்டயில் சென்னை -கொல்கத்தா அணிகள் மோதுகின்றன. இதற்காக இரு அணி வீரர்கழும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் சமூகவலைத்தளம் வாயிலாக ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த டோனி தான் ஏன் 7 ம் எண் கொண்ட ஜெர்சி அணிந்து விளையாடுகிறேன் என விளக்கம் அளித்துள்ளார்.

அதில் 7 என்பது எனக்கு அதிர்ஷ்டமான எண் என்று ஆரம்பத்தில் பலர் நினைத்ததுண்டு. ஆனால் நான் மிகவும் எளிமையான காரணத்திற்காக தான் அந்த எண்ணைத் தேர்ந்தெடுத்தேன். நான் பிறந்தது ஜூலை 7 ஆம் தேதி, எனவே, 7வது மாதம் 7வது நாள், இதுவே காரணம்.நான் எண்களை பற்றி மூடநம்பிக்கை கொண்டவன் அல்ல. ஆனால் எண் 7 என் இதயத்திற்கு நெருக்கமான எண் ” என தெரிவித்தார்.

Advertisement