வேலம்மாள் கல்வி குழுமம் சார்பில் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத்தின் ஆதரவுடன் மதுரை சிந்தாமணி ரிங் ரோடு பகுதியில் வேலம்மாள் மருத்துவமனை அருகில் 11½ ஏக்கர் நிலப்பரப்பில் சர்வதேச தரத்திலான கிரிக்கெட் ஸ்டேடியம் கட்டப்பட்டுள்ளது. பல்வேறு வசதிகளுடன் பிரமாண்டமான முறையில் ரூ.325 கோடி செலவில் இந்த ஸ்டேடியம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதை திறந்து வைக்க இந்திய முன்னாள் கேப்டன் தோனி இன்று மதுரை வந்தடைந்தார். இதையடுத்து கிரிக்கெட் ஸ்டேடியத்தை இன்று இந்திய முன்னாள் கேப்டன் தோனி திறந்து வைத்தார்.
பயிற்சி ஆடுகளங்கள், வீரர்களுக்கான ஓய்வறை, உடற்பயிற்சி கூடம், ஆம்புலன்ஸ் மற்றும் மருத்துவமனை, கார் பார்க்கிங் உள்ளிட்ட வசதிகள் இந்த ஸ்டேடியத்தில் உள்ளன.
சென்னை சேப்பாக்கத்திற்கு அடுத்து தமிழ்நாட்டின் 2-வது மிகப்பெரிய கிரிக்கெட் ஸ்டேடியம் இது தான் என்பது குறிப்பிடத்தக்கது.