மத்திய அரசின் திட்டத்திற்கு தேர்வானது  அஜித்தின்  “தக்‌ஷா” குழு

322
Advertisement

அண்ணா பல்கலைக்கழகத்தின் தக்‌ஷா குழு, டிரோன் தயாரிப்புக்கான மத்திய அரசின் சிறப்பு ஊக்கத் தொகை திட்டத்திற்கு தேர்வாகி இருக்கிறது.

சென்னையை சேர்ந்த ட்ரோன் உதிரிபாகங்களை தயாரிக்கும் ஜூப்பா ஜியோ நேவிகேசன் டெக்னாலஜிஸ் என்கிற நிறுவனமும் மத்திய அரசின் ஊக்கத்தொகை பெறும் திட்டத்தின் கீழ் தேர்வுசெய்யப்பட்டுள்ளது.

மட்டும் அல்லாமல் மத்திய விமான போக்குவரத்து துறையுடன் இணைந்து தேவையின் அடிப்படையில் ட்ரோன்கள் தயாரிக்கும் திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது.

பல்லேறு துறைகளில் ட்ரோன்களை பயன்படுத்தவும் , மற்றும் தயாரிப்பை ஊக்குவிக்கவும் இதுபோன்று நடவடிக்கைகளை எடுத்துவருகிறது மத்திய  அரசு.

 தக்‌ஷா குழு என்பது , முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் ஆலோசனையின் பெயரில் துவங்கப்பட்டதுடன் தக்‌ஷா என்கிற பெயர் அப்துல்கலாமால் சூட்டப்பட்டது என்பது குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாகும்.

மேலும் அஜித் குமார் இக்குழுவிற்கு ஆலோசகராகவும் உள்ளார். அஜித்தின்  தக்‌ஷா குழு சர்வதேச அளவில் பல  சாதனைகளை படைத்துள்ளது.அதில் குறிப்பாக  உலகம் முழுவதிலுமிருந்து 55 ஆளில்லா விமானங்கள் பங்கேற்ற போட்டியில் ,11 விமானங்கள் இறுதிப்போட்டிக்கு தேர்ந்தெடுக்கப்பட்டன. இதில் அஜித் ஆலோசகராக இருந்த தக்‌ஷா குழு இரண்டாவதாக இடம்பிடித்தது.

மற்றொரு போட்டியில் , தொடர்ந்து 6 மணி நேரம் பறந்த தக்‌ஷா ட்ரோனின் சாதனை உலக சாதனையாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. “சர்வதேச வான்வெளி போட்டி குழு” இந்த அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

இந்நிலையில் மத்திய அரசின் திட்டங்களுக்கு  தக்‌ஷா குழு  தேர்வாகியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.