Thursday, February 19, 2026

234 கிலோ கேக்கை ஊர்வலமாக எடுத்து சென்று கொண்டாடிய தவெகவினர்

கள்ளக்குறிச்சியில் விஜய்யின் 51ஆவது வயதை குறிக்கும் வகையில் 51 அடி நீளம் 234 தொகுதிகளிலும் வெற்றியை குறிக்கும் வகையில் 234 கிலோ எடை கொண்ட பிரம்மாண்டமான கேக்கை ஊர்வலமாக எடுத்து தவெகவினர் கொண்டாடியுள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடிகரும், தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய்யின் 51ஆவது பிறந்த நாளை முன்னிட்டு, தவெக கட்சியினர் விஜய்யின் வயதை குறிக்கும் வகையில் 51 அடி நீளம், 234 தொகுதியிலும் வெற்றியை குறிக்கும் வகையில் 234 கிலோ எடையும் கொண்ட பிரம்மாண்ட கேக் தயாரிக்கப்பட்டது.

இந்த கேக்கினை, மினி லாரியில் மேளதாளத்துடன் பட்டாசு வெடி முழங்க ஊர்வலமாக எடுத்துச் சென்று மந்தைவெளி திடலில் வைத்து கேக் வெட்டப்பட்டது. இதையடுத்து பொதுமக்களுக்கும், சிறுவர்களுக்கும் வழங்கப்பட்டது.

Related News

Latest News