தலைநகரில்  தொடங்கிய கொரோனா நான்காம் அலை ?

290
Advertisement

கொரோனா மூன்றாம் அலை கட்டுப்பாட்டில் உள்ள நிலையில் , மீண்டும் மெல்ல மெல்ல பரவத் தொடங்கியுள்ளது.குறிப்பாக, டெல்லி, மகாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கரோனா பரவலின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்துவருகிறது.

குறிப்பாக தலைநகர் டெல்லியில் , நேற்று முன்தினம் ஒரே நாளில் 1009 பேர் புதிதாக பாதிப்புக்கு உள்ளாகி இருக்கின்றனர்.இது முந்தைய தினத்தை விட 60 சதவீதம் அதிகம் ஆகும்.

தற்போதைய தொற்று பரவலுக்கு  ஒமைக்ரான் மாறுபாடே காரணம் என விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.மீண்டும் மக்களை அச்சுறுத்த தொடங்கியுள்ளது கொரோனா.

இந்நிலையில் , டெல்லி மாநில அரசு சுகாதார முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகிறது.அதில் ஒரு பகுதியாக , பள்ளிகளுக்கு பட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு உள்ளது.

அதில் ,

மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கட்டாயம் வெப்பநிலை பரிசோதனையை செய்தபின் தான் பள்ளியின் உள் நுழைய வேண்டும்.

பெற்றோர்கள் கொரோனவால் பாதிக்கப்பட்டுருந்தால் , பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்பக்கூடாது.

மாணவர்கள் கட்டாயம் தங்கள் உணவுகளையோ அல்லது  மற்ற உபயோக பொறுட்களை மற்ற மாணவர்களிடம் பகிர்ந்துகொள்ளக்கூடாது.

உள்ளிட்ட முக்கிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளது. முதல் , இரண்டு , மூன்று என பல முகங்களை காட்டி உலக நாடுகளை மண்டியிடவைத்த கொரோனா தற்போது மீண்டும் தன் மற்றொரு முகத்தை காட்டத்தொடங்கி உள்ளது.

இது இந்தியாவை பாதிக்காது என ஆய்வாளர்கள் கணித்திருந்தாலும். அது நம் கையில் தான் உள்ளது.மத்திய ,மாநில அரசுகளின் உத்தரவுகளை கட்டாயம் பின்பற்றவேண்டும் என்பதில் சமரசம் என்ற வார்த்தையை மறந்துவிட்டு நம்மால் நம்மை காத்துக்கொள்ள முடியும் என்பதை நிரூபித்து காட்டுவோம்.