Friday, January 24, 2025

டெல்லி சட்டசபை தேர்தல் தேதி : வெளியானது அதிகாரபூர்வ அறிவிப்பு

டில்லி சட்டசபையின் பதவிக்காலம் பிப்ரவரி மாதத்துடன் நிறைவடைகிறது. இதையடுத்து, 70 தொகுதிகளுக்கும் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் ஆளும் ஆம் ஆத்மி கட்சி, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில் டெல்லி சட்டசபை தேர்தல் தேதியை இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன் படி பிப்ரவரி 5ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. வாக்கு எண்ணிக்கை பிப்ரவரி 8ஆம் தேதி நடைபெறவுள்ளது.

டெல்லியில் மொத்தம் 1.55 கோடி வாக்காளர்கள் உள்ளனர், ஆண்கள் 83.49 லட்சம், பெண்கள் 71.74 லட்சம் மற்றும் 20 முதக் 29 வயதுடையவர்கள் 25.89 லட்சம் பேர் உள்ளனர். 13,033 வாக்குச் சாவடிகள் அமைக்கப்படவுள்ளன. 

Latest news