டெல்லி சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன. சரியாக காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 70 தொகுதிகளை கொண்ட டெல்லியில் ஆட்சி அமைக்க பெரும்பான்மைக்கு 36 தொகுதிகள் தேவை.
இந்நிலையில் பாஜக 43 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. ஆம் ஆத்மி 26 இடங்களில் முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் மிகவும் பின்னடைவை சந்தித்துள்ளது.