பாதுகாப்புத்துறையினர் மேற்கொள்ளும் ஆபரேஷன்கள் மற்றம் பாதுகாப்பு படையினரின் செயல்பாடுகளை நேரலையில் ஒளிபரப்புவதை அனைத்து ஊடகங்கள், டிஜிட்டல் மீடியாக்கள் மற்றும் தனிநபர்கள் தவிர்க்க வேண்டும் என பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதுபோன்ற செய்தி வெளியீட்டினால் கடந்த காலங்களில் நடந்த கார்கில் போர், மும்பை தாக்குதல் உள்ளிட்ட சம்பவங்களில் பெரும் விளைவுகள் ஏற்பட்டன.
எனவே, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கையின் போது, நியமிக்கப்பட்ட அதிகாரிகளே, அதுபற்றி விளக்கங்களை கொடுப்பார். அனைவரும் தங்களின் விழிப்புணர்வு மற்றும் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.