Sunday, December 28, 2025

முதல்வர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறு : பாஜக நிர்வாகி மீது வழக்குப்பதிவு

விருதுநகரில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து முகநூலில் அவதூறு பதிவு போட்ட பாஜக நிர்வாகி மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விருதுநகர் மாவட்டம் பெரியமருளுத்து பாஜக தெற்கு ஒன்றிய செயலாளர் கோபி, அவரது முகநூல் பக்கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறித்து அவதூறான கருத்தை பதிவிட்டதாக தெரிகிறது.

இதையடுத்து, பாஜக நிர்வாகி கோபி மீது உரிய நடவடிக்கை எடுக்க கோரி, திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கார்த்திகேயன் சூலக்கரை காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் பாஜக நிர்வாகி கோபி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related News

Latest News