முன்னாடி இருக்க கம்பியை மறந்த சிறுத்தை

271
Advertisement

பொதுவாக காட்டில் மற்றொரு உயிரினத்தை வேட்டை ஆடி உண்ணுவதில் சிங்கம் , சிறுத்தை போன்ற ஒரு சில விலங்குகள் தனித்துவம் வாய்ந்தது. இவைகளுக்கு அதிக அளவிலும் , எளிதாகவும் இரையாகும் விலங்கு மான்.

காடுகளில் உணவை தேடி மான்கள் அங்கும் இங்கும் உலாவரும் பொது சிறுத்தை போன்ற வேட்டையாடும் விலங்குகளுக்கு இறை ஆகி விடுகிறது. சில நேரங்களில் அவைகளிடமிருந்து மான்கள் தப்பித்துசென்று விடுவதும் உண்டு.

ஒரு சிறுத்தை மானை எப்படி வேட்டை அடிக்கிறது என்பதை நாம் பல முறை வீடியோக்களில் பார்த்துருப்போம். சிலருக்கு மான் கொல்லப்படுவதை கண்டு அழுகை கூட வந்துவிடும்.

சமீபத்தில் ஆப்ரிக்கன் அனிமேல்ஸ் என்ற டீவ்ட்டர் பக்கத்தில் , புல் மேய்ந்துகொண்டு இருக்கும் ஒரு மானை வேட்டையாட வந்த சிறுத்தையின் வீடியோ பகிரப்பட்டு உள்ளது.

நாம் நினைத்தது ஒன்று , ஆனால் அங்கு நடந்ததோ மற்றொரு சம்பவம். இந்த வீடியோவில், மான் ஒன்று புல் மேய்ந்துகொண்டு இருக்கிறது . மானை கவனித்த சிறுத்தை ஒன்று அந்த மானை வேட்டையாட பதுங்கியபடி மெதுவாக மானை நெருங்கி வருகிறது.

சிறுத்தை தன்னை வேடையாட வருகிறது என்று தெரிந்தும்கூட அந்த மான் பயமின்றி ரசித்தபடி புல் மேய்ந்து கொண்டிருக்கிறது. சிறுத்தை அருகில் வந்து மானை வேட்டை ஆட முயல்கிறது அனால்.. மானின் நிழலை தொடும் தூரத்தை நெருங்கிய சிறுத்தை மானை தொட முடியவில்லை.

குழப்படைந்த சிறுத்தைக்கு அங்கு தான் ஒரு டீவ்ஸ்ட் , என்னவென்று பார்த்தால், மானிற்கு முன் ஒரு கம்பிவேலி உள்ளது. இதை கவனிக்காத சிறுத்தையின் வேட்டையாடும் முயற்சி கடைசிவரை மானிற்கு ஏதோ …வேடிக்கை பார்த்தது போல உள்ளது. இறுதியில் ஏமாற்றத்துடன் அங்கிருந்து நடைகட்டியது அந்த சிறுத்தை.

இந்த வீடியோ இணையவாசிகளை ஈர்த்து வருகிறது ” என்ன பாஸ் இடையில இருக்க கம்பியை மறந்துட்டீங்களே .. ! போன்ற நகைச்சுவையான காமெண்ட்களை பகிர்ந்து வரும் இந்த வீடியோ பார்ப்போர் ரசிக்கும் படி உள்ளது.