தீபிகா படுகோனின் அழகின் இரகசியம் இது தானா? தெரிஞ்சா நீங்களே ஆச்சர்யப்படுவீங்க!

46
Advertisement

இதுவரை மூன்று Filmfare விருதுகளை வாங்கி குவித்து, பாலிவுட்டில் தனக்கென ஒரு இடத்தை ஏற்படுத்தி, இந்தியாவில் அதிக சம்பளம் பெரும் நடிகைகளில் முன்னணி இடம் பிடித்துள்ள தீபிகா படுகோனின் அழகை பார்த்து மயங்காதவர்களே இருக்க முடியாது.

அந்த அழகை அப்படியே பாதுகாக்க, தீபிகா என்னென்ன வழிமுறைகளை கையாளுகிறார் என்பதை அவரே பல தருணங்களில் பகிர்ந்து கொண்டுள்ளார்.

சிறப்பான தோற்றத்தை வெளிப்படுத்த, சுத்தமான மற்றும் நிம்மதியான மனநிலை மிகவும் முக்கியமானது என வலியுறுத்தி வருபவர் தீபிகா. எவ்வளவு பிஸியான schedule இருந்தாலும் அவ்வபோது தண்ணீர் குடிப்பதை வழக்கமாக வைத்துள்ள தீபிகா, அழகான சருமத்திற்கு உள்ளிருந்து நீரோட்டம் அவசியம் என்கிறார்.

Advertisement

சருமம், முடி மற்றும் மனதிற்கு நன்மை தரும் உணவுகளை தேர்ந்தெடுத்து உண்பதே ஆரோக்கியமான அழகிற்கு அடிப்படையாக அமையும் என்பதை, தீபிகா உறுதியாக நம்புவது மட்டும் இல்லாமல் கடைப்பிடித்தும் வருகிறார்.

Makeup போடுவதற்கு முன் சருமத்தை சரியான முறையில் தயார் செய்வது மற்றும் makeup remove செய்யும் போது double cleanse செய்வது சரும பராமரிப்புக்கு சிறந்த வழிமுறை என்கிறார் தீபிகா. தேவைப்படும் பொழுது சமூகவலைதளங்களில் Beauty Toolsஐ பயன்படுத்துவதாக குறிப்பிடும் தீபிகா, அதில் பெரிதாக தவறொன்றுமில்லை என்கிறார்.

தனது தனிப்பட்ட skin care routineஐ தவறாமல் கடைப்பிடிக்கும் தீபிகா, sunscreen போடாமல் வாசலை தாண்டுவதில்லையாம். இது மட்டுமில்லாமல், தலைமுடி போஷாக்கிற்காக தேங்காய் எண்ணையை அதிகம் உபயோகிப்பதாக தீபிகா பகிர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.