கடந்த ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி மகாராஷ்டிராவில் உள்ள கோலாப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பாண்டுரங்கன் (65) என்ற நபர் மாரடைப்பு காரணமாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக உறுதி செய்தனர். எதுவும் செய்ய முடியாத நிலையில், சடலத்தை வீட்டிற்கு எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் தயார் செய்யப்பட்டது.
ஆம்புலன்சை ஓட்டிச் சென்றவர், இறந்தவரின் உடலை விரைவாகக் கொண்டு செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தில் வாகனத்தை வேகமாக ஓட்டினார். அப்போது ரோட்டில் இருந்த பெரிய ஸ்பீட் பிரேக்கரில் வாகனம் வேகமாக ஏறி இறங்கியது. இதில் பாண்டுரங்கனின் விரல்கள் அசைவதை கவனித்துள்ளனர்.
இதையடுத்து பாண்டுரங்கன் உடலை மருத்துவமனைக்கு கொண்டு சென்று அவருக்கு சிகிச்சை அளித்து உயிரை காப்பாற்றியுள்ளனர். இரண்டு வாரங்களுக்கு பிறகு வீட்டிற்கு சென்ற பாண்டுரங்கன் தற்போது நலமுடன் இருக்கிறார்.