ஜார்க்கண்ட் மாநிலத்தின் தலைநகர் ராஞ்சியில் உள்ள கான்கே சாலையில் மலர் அலங்கார கடை உள்ளது. முதலமைச்சர் மற்றும் சபாநாயகரின் இல்லத்திலிருந்து சிறிது தூரத்தில் அமைந்துள்ள இந்த மலர் அலங்காரக் கடைக்குள், துப்பாக்கியுடன் நுழைந்த மர்ம நபர்கள் 1.67 லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் சென்றனர்.
இந்த சம்பவம் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்த விவகாரம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.