ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே சேதமடைந்து காணப்படும் சாலைகளால், வாகனஓட்டிகள் விபத்தில் சிக்குவது தொடர்கதையாகியுள்ளது.
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நொச்சிகுளம் முதல் அப்பயநாயக்கன்பட்டி, ஆலத்தூர், நக்கமங்கலம் விலக்கு வரையிலான தார்சாலைகள், மிகவும் சேதமடைந்து குண்டும், குழியுமாக காட்சியளிக்கிறது. இதனால் வாகனஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர்.
இது குறித்து பலமுறை அதிகாரிகளிடம் புகாரளித்தும் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம் இதனை கவனத்தில் கொண்டு, சாலையை சீரமைத்து தர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.