Saturday, February 15, 2025

சத்தியம் செய்தியின் எதிரொலி : பழுதடைந்த மின்கம்பங்கள் சரி செய்யப்பட்டன

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே உள்ள வென்றஹள்ளி கிராமத்தில் சாலை ஓரத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட மின் கம்பங்கள் பழுதடைந்து அபாய நிலையில் இருந்தன. இது குறித்து சத்தியம் தொலைக்காட்சியில் செய்தி வெளியிடப்பட்டது.

இதன் எதிரொலியாக, மின் கம்பங்கள் புதிதாக அமைக்கப்பட்டு, தற்போது செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில், வென்றஹள்ளி கிராமத்தைச் சேர்ந்த மக்கள், சத்தியம் தொலைக்காட்சிக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Latest news