இலவசம் என்றால் யாருக்குத் தான் பிடிக்காது? ஆனால், எல்லா இலவசங்களுக்கும் கூட ஒரு விலை கொடுக்கப்பட வேண்டி இருப்பதை பலரும் உணர்வதில்லை.
வட அமெரிக்காவில் அர்கன்சாஸ் மாநிலத்தில் உள்ள மர்ஃபீஸ் பரா (Murfreesboro) எனும் இடத்தில் 37ஏக்கர் அளவில் Crater of Diamonds State Park எனும் பூங்கா உள்ளது. எரிமலை வெடிப்புகளால் தாக்கம் ஏற்பட்டுள்ள இந்த இடம் இயற்கையாக அமைந்த ஒரு வைரக்கல் சுரங்கம் ஆகும்.
இங்கு பலவகையான தாதுக்கள், ரத்தினங்கள் மற்றும் வைரக்கற்கள் புதைந்து காணப்படுகின்றன. 1972ஆம் ஆண்டு அர்கன்சாஸின் மாநில பூங்காவாக அறிவிக்கப்ட்டுள்ள இந்த சுரங்கத்தில் கிடைக்கும் வைரம் மற்றும் விலையுயர்ந்த கற்களை மக்களே எடுத்துக் கொள்ளலாம். ஆனால், பேட்டரி அல்லது மோட்டார் பொருத்தப்பட்ட கருவிகளுக்கு அனுமதி கிடையாது.
இந்த வயலில் 1942ஆம் ஆண்டு, John Huddlestone என்னும் விவசாயி 1,50,000 டாலர்கள் மதிப்புடைய வைரக்கல்லை முதன் முதலில் கண்டுபிடித்தார். அதற்கு பின், இதுவரை அங்கு வரும் மக்களால் 35,000 வைரக்கற்கள் கண்டறியப்பட்டுள்ளது.
இந்த வைரம் வாஷிங்டன் டி.சி.யில் உள்ள தேசிய வரலாற்று அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது. அது சரி, மண்வெட்டியை எடுன்னு சென்னைல இருந்து கிளம்ப நினைக்குறவங்க, டிக்கெட் செலவுக்கு மட்டும் 1,75,411 ரூபாயை முதல்ல ரெடி பண்ணிக்கோங்க.