வீசப்போகும் 140 கி.மீ. சூறாவளி காற்று – ஜாக்கிரதை மக்களே!!

வங்கக்கடலில் உருவான ‘அர்னாப்’ புயல் வலுப்பெற்று மிகத் தீவிர புயலாக மாறியுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இன்று (அக்டோபர் 27) காலை 8.30 மணி நிலவரப்படி, மத்தியமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய இந்தப் புயல், இன்று மேற்கு-வடமேற்கு திசையில் நகரக்கூடும். நாளை (அக்டோபர் 28) ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஏனாம் கடற்கரைப் பகுதிகளில், பாபட்லா – விசாகப்பட்டினம் இடையே கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

இன்று மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மணிக்கு 30–40 கி.மீ. வேகத்தில் பலத்த காற்றும் வீசலாம். நாளை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் மிதமான மழைக்கும், தென் தமிழகத்தில் லேசான மழைக்கும் வாய்ப்புள்ளது.

அக்டோபர் 29, 30 ஆகிய தேதிகளில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தென் தமிழகத்தில் லேசான மழை பெய்யலாம். நவம்பர் 1, 2 தேதிகளில் வட தமிழகத்திலும் மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று, நாளை ஓரளவு மேகமூட்டம் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33–34 டிகிரி செல்சியஸாக இருக்கும்.

வட தமிழகக் கடலோரப் பகுதிகளில் இன்று, நாளை மணிக்கு 40–50 கி.மீ. வேகத்திலும், இடையிடையே 60 கி.மீ. வேகத்திலும் காற்று வீசக்கூடும் என்பதால், மீனவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Related News

Latest News