போலி தங்க நகைகளை ஏற்றுமதி செய்து பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த புகாரில், சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் ஐவர் உட்பட 13 பேர் மீது சிபிஐ போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு போலி தங்க நகைகளை ஏற்றுமதி செய்து பல கோடி ரூபாய் மோசடி நடந்திருப்பதாகவும், இதனால் அரசுக்கு பெரும் இழப்பீடு நடந்துள்ளதாகவும் கூறி சில நாள்களுக்கு சென்னை விமான நிலைய சுங்கத்துறை அலுவலகத்தில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர்.
இந்த மோசடி கடந்த 2020 – 22 காலகட்டத்தில் நடந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், வழக்கில், சுங்கத்துறை அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்ய மத்திய அரசு அனுமதி அளிப்பதில் தாமதமாகி வந்ததாக கூறப்பட்டது. இந்நிலையில், தற்போது மத்திய அரசு அனுமதி அளித்திருக்கும் நிலையில், சென்னை விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் ஐவர் உட்பட 13 பேர் மீது சிபிஐ போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.