Thursday, December 11, 2025

CSK வெளியிட்ட AI வீடியோ வைரல்!! குஷியில் ரசிகர்கள்..

19-வது IPL. கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் ஏலம் அடுத்த மாதம் 16-ந் தேதி நடக்கவுள்ளது. அதற்கு முன்னர் 10 அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் மற்றும் விடுவிக்கும் வீரர்களின் பட்டியலை வெளியிட வேண்டும்.

இந்த நிலையில் தற்போது வீரர்கள் பரஸ்பர வர்த்தக பரிமாற்றம் தொடங்கியுள்ளது. அந்த வகையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியில் இருந்த சஞ்சு சாம்சனை சென்னை அணி டிரேட் முறையில் வாங்க உள்ளதாக பல தகவல்கள் வந்த நிலையில் இன்று { 15.11.2025 } அதிகாரப்பூர்வ அறிவிப்பை CSK நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அதாவது, சென்னை அணியில் விளையாடிய ஜடேஜா, சாம் கரனை ராஜஸ்தான் அணிக்கு கொடுத்து ராஜஸ்தான் அணியின் கேப்டனாக செயல்பட்ட சஞ்சு சாம்சனை CSK அணி வாங்கியுள்ளது. அவரை டிரேட் முறையில் CSK அணி வாங்கியுள்ளது. இந்த நிலையில், அவரை வரவேற்கும் விதமாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சமூக வலைதளங்களில் AI வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது.இது ரசிகர்களை கவர்ந்துள்ளது. மேலும், இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Related News

Latest News