Play Off வாய்ப்பினை இழந்து வெளியேறினாலும் கூட சென்னை, ராஜஸ்தான் அணிகள் இளம்வீரர்களுக்கு தொடர்ச்சியாக வாய்ப்புகளை வழங்கி வருகின்றன. CSK 17 வயது ஆயுஷ் மாத்ரேவை பிளேயிங் லெவனில் இறக்க, பதிலுக்கு ராஜஸ்தான் ‘எங்ககிட்டயும் சீப்பு இருக்கு’ என்று, 14 வயது சூரியவன்ஷியை களமிறக்கி பதிலடி கொடுத்தது.
இவர்கள் இருவருமே எதிர்கால இந்திய அணியின் நட்சத்திரங்களாகப் பார்க்கப்படுகின்றனர். இந்தநிலையில் IPL தொடரில் ஆயுஷ் மாத்ரே, சூரியவன்ஷியின் அதிரடி ஆட்டத்தால் ஈர்க்கப்பட்ட BCCI, 19 வயதுக்கு உட்பட்டோருக்கான U -19 அணியில் இருவருக்கும் வாய்ப்பு வழங்கியுள்ளது.
ஆயுஷ் மாத்ரேவிற்கு கேப்டன் பதவியும், வைபவிற்கு வீரராகவும் அணியில் இடம் கிடைத்துள்ளது. இந்திய U-19 கிரிக்கெட் அணி, இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள் போட்டிகள், இரண்டு 4 நாட்கள் போட்டிகள் மற்றும் ஒரு பயிற்சி போட்டியில் விளையாடவுள்ளது.
இதற்கான இந்திய அணியை மே 22ம் தேதி BCCI அறிவித்தது. இதில்தான் மேற்கண்ட இரண்டு இளம்வீரர்களுக்கும் இடம் கிடைத்திருக்கிறது. வருகின்ற 2026ம் ஆண்டு U – 19 உலகக்கோப்பை ஜிம்பாப்வேவில் நடைபெறுகிறது. இதற்கு தயாராகும் வகையில் ஒவ்வொரு வீரரையும், BCCI பார்த்துப் பார்த்து தேர்வு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.