Wednesday, January 14, 2026

எதிர்பார்த்த அந்நாளும் ‘இதுதானா’ சாம்சனை கொண்டாடும் ‘CSK’ ரசிகர்கள்

இந்த 2025ம் ஆண்டு IPL தொடர் பஞ்சாப், பெங்களூரு, குஜராத், மும்பை பிற அணிகளுக்கு அவ்வளவு உற்சாகமாக இல்லை. இதனால் வீரர்களை அணியில் இருந்து விடுவிப்பது மற்றும், மாற்று வீரர்களை வாங்குவது போன்ற வேலைகளில் IPL அணிகள் ஈடுபட்டு வருகின்றன.

அந்தவகையில் நீண்ட நாட்களாக, சென்னை ரசிகர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்த சம்பவம் தற்போது நடந்துள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சஞ்சு சாம்சனை விடுவித்து இருக்கிறது. இதையடுத்து அவர் சென்னை அணியில் என்ட்ரி கொடுக்க இருக்கிறார்.

இதுதொடர்பான சமூக வலைதள போஸ்ட் ஒன்றினை, சாம்சனின் மேனேஜர் Prashob Sudevan லைக் செய்துள்ளார். இதன்மூலம் சஞ்சு சாம்சன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு வரவிருப்பது உண்மையாகி இருக்கிறது. இதைப்பார்த்த ரசிகர்கள், ”சேட்டன் வந்தல்லோ” என்று கொண்டாடிக் கொளுத்தி வருகின்றனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில், சஞ்சு சாம்சனுக்கு துணை கேப்டன் பதவி அளிக்க இருப்பதாகவும், ருதுராஜே கேப்டனாக தொடர்வார் என்றும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனவே விரைவில் இதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை, CSK வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related News

Latest News