வாரத்தின் முதல் நாளான இன்றைய வர்த்தகம் தொடக்கத்தில் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இதுவரை இல்லாத அளவிற்கு 67 பைசா குறைந்து 87.31 ரூபாயாக வீழ்ச்சியடைந்துள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் வரிவிதிப்பின் எதிரொலியாக அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு 87 ரூபாய்க்கு மேல் சரிந்துள்ளது. டிரம்ப் வரிவிதிப்பின் விளைவாக இந்திய பங்குச் சந்தைகளும் வீழ்ச்சியடைந்தது குறிப்பிடத்தக்கது.