கொரோனா பரவாமலிருக்க சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க
உலகம் முழுவதும் அந்தந்த நாட்டு அரசாங்கங்கள் வலியுறுத்தி வருகின்றன.
மனிதர்கள் இடைவெளியின்றிப் பொது இடங்களிலும், சந்தைகளிலும்,
திருவிழா நடைபெறும் இடங்களிலும், தேர்தல் பிரசாரக் கூட்டங்களிலும்
கூடிவிடுவதால் கொரோனா தொற்று எளிதில் ஏற்பட்டுவிடுகிறது-
ஆனால், அரசாங்க உத்தரவை முறையாகக் கடைப்பிடிக்கும் ஒரே இனம்
கொக்கு மட்டுமே. சீரான இடைவெளியில் அவை உட்கார்ந்திருக்கும் அழகைப்
பாருங்கள்…எவ்வளவு அழகாக அமர்ந்திருக்கின்றன….
அவற்றுக்கு யார் கற்றுக்கொடுத்திருப்பார்கள்…?
ஒருவேளை பறவை மொழியிலேயே அரசாங்கம் உத்தரவு
போட்டிருக்குமோ?