சென்னை சோழிங்கநல்லூர் தொகுதிக்கு உட்பட்ட ஒட்டியம்பாக்கம் ஊராட்சியில் தினந்தோறும் இரவு நேரங்களில் சாலையில் பல மாடுகள் சுற்றி திரிகின்றன.
சாலையில் சுற்றித் திரியும் மாடுகளால் ஏற்கனவே பலமுறை விபத்து ஏற்பட்டுள்ளது. தொடர்ச்சியாக சாலையில் மாடுகள் சுற்றி திரிவதால் அவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் அச்சத்தில் செல்கின்றன.
எனவே வாகன ஓட்டிகளுக்கு விபத்து ஏற்படுத்த வகையில் சாலையில் சுற்றி திரியும் மாடுகளைப் பிடித்து மாட்டின் உரிமையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலரின் கோரிக்கையாய் உள்ளது.