கொரோனா…குளியலறையில் தனிமைப்படுத்திக்கொண்ட பெண்!

436
Advertisement

கொரோனா பரிசோதனை செய்ததைத் தொடர்ந்து குளியலறையில் தனிமைப்படுத்திக்கொண்ட பெண்ணின் செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

அமெரிக்காவின் மிக்ஸிகன் பள்ளி ஆசிரியை மரிசா ஃபோட்டியா கடந்த டிசம்பர் 19 தேதி தனது சகோதரர் மற்றும் தந்தையுடன் சிகாகோவிலிருந்து ஐஸ்லாந்துக்கு விமானத்தில் பயணித்துக்கொண்டிருந்தார். விமானம் புறப்பட்ட ஒன்றரை மணி நேரத்தில் தனது தொண்டை வலிப்பதை உணர்ந்தார்.

முழுமையானத் தடுப்பூசி, பூஸ்டர் ஊசி செலுத்திக்கொண்டபோதும் அவருக்கு சந்தேகம் வந்தது. காரணம், விமானத்திற்குள் ஏறும்முன் 2 பிசிஆர் டெஸ்ட், 5 ரேபிட் டெஸ்ட் எடுத்தபோது நெகட்டிவ் என்று வந்திருந்தது.

அதேசமயம் விமானத்தில் உள்ள 150 பயணிகளில் பலர் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவர்கள் என்பதுதான்.

உடனே, விரைவான சோதனைக் கருவிகளைப் பயன்படுத்தித் தன்னைத்தானே பரிசோதித்துக்கொள்ள முடிவுசெய்தார். அப்போது மேற்கொண்ட பரிசோதனையில் இரண்டே விநாடிகளில் கோவிட்19 பாசிட்டிவ் என்று முடிவு வந்தது.

அதைத் தொடர்ந்து மரிசா, விமானத்தின் குளியலறையில் சுமார் 5 மணி நேரம் தன்னைத் தனிமைப்படுத்திக்கொண்டார். விமானப் பணிப் பெண்களும் ஆசிரியை மரிசாவை நன்கு கவனித்துக்கொண்டனர்.

ஐஸ்லாந்தில் விமானம் தரையிறங்கியவுடன், மரிசாவும் அவரது சகோதரர், தந்தையும் கடைசியாக வெளியேறினர்.

விமானக் குளியலறையில் தனிமைப்படுத்திக்கொண்ட செயல் அனைவரின் கவனத்தையும் தற்போது ஈர்த்து வருகிறது.