சந்தானம் ஹீரோவாக நடித்துள்ள படம், ‘டெவில்ஸ் டபுள் நெக்ஸ்ட் லெவல்’ (DD Next Level). பிரேம் ஆனந்த் இயக்கியுள்ள இந்தப் படத்தில், கீதிகா திவாரி, செல்வராகவன், கவுதம் வாசுதேவ் மேனன், நிழல்கள் ரவி, ராஜேந்திரன், கஸ்தூரி, ரெடின் கிங்ஸ்லி, யாஷிகா ஆனந்த் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘ஸ்ரீநிவாச கோவிந்தா’ பாடல், திருமலை திருப்பதி ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமியை அவமதிக்கும் விதமாக உள்ளதாக இந்து அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
டிடி நெக்ஸ்ட் லெவல் திரைப்படத்திற்கு தொடர்ந்து எதிர்ப்பு கிளம்பியுள்ள போதும், தயாரிப்பு நிறுவனம் இதுவரை எந்தவொரு விளக்கமும் அளிக்காமல் இருந்தது. இந்நிலையில், அந்த சர்ச்சை பாடலை படத்தில் இருந்து நீக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.