தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட்டது. ஜூன், ஜூலை மாதங்களில் அரசு விடுமுறை ஏதும் இல்லாமல் இருந்து வந்தது. இதையடுத்து ஆகஸ்ட் மாதம் சுதந்திர தினம், விநாயகர் சதூர்த்தி என வார நாட்களில் அரசு விடுமுறை கிடைத்தது.
இந்நிலையில் அடுத்த மாதம் (செப்டம்பர்) முதல் வாரத்தில் பள்ளிகளுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கவுள்ளதால் மாணவர்கள் மீண்டும் குஷியில் உள்ளனர். செப்டம்பர் 5 ஆம் தேதி மிலாடி நபி திருநாளை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மிலாடி நபி வெள்ளிக்கிழமையில் வருவதால் அதற்கு அடுத்த நாட்களான சனி, ஞாயிறு வருவதால் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைத்துள்ளது.