பெரியார் குறித்து நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது. இதனிடையே தமிழ்நாடு முழுவதும் சீமான் மீது 70 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில் சிவகாசியில் காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது “வெளியே இருந்து பாஜகவிற்கு வேலை செய்யும் சீமான், நாம் தமிழர் கட்சியை கலைத்துவிட்டு பாஜகவில் சேர வேண்டும்” ஆர்.எஸ்.எஸ் கொள்கையை செயல்படுத்த சீமான் துணை நிற்பது தமிழ்நாட்டு மக்களுக்கு செய்யும் துரோகம் என பேசியுள்ளார்.