Saturday, August 2, 2025
HTML tutorial

சீமான் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்

பெண்களை பற்றி அவதூறாக பேசி வரும் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை வேப்பேரியில் உள்ள காவல்ஆணையர் அலுவலகத்தில் தேசிய முன்னேற்ற கழகம் சார்பில் ஜி.ஜி. சிவா என்பவர் சீமான் மீது புகார் அளித்துள்ளார். பின்னர், செய்தியாளர்களை சந்தித்த அவர்,
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பெண்களை கொச்சைப்படுத்தி பேசியது மட்டுமில்லாமல் சீமான் மீது புகார் கொடுத்த நடிகை பற்றி அவதூறாக பேசி உள்ளார் என்று கூறினார்.

குறிப்பாக பாலியல் சீண்டலில் ஈடுபட்ட சீமான் தைரியமாக பொதுமக்கள் மத்தியில் சவால் விட்டுக்கொண்டு வெளியில் சுற்றி வருகின்ற காரணத்தினால் அவரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என புகார் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக சீமான் மீது பலவழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில், இன்னும் போலீசார் கைது செய்யாமல் இருப்பது ஆச்சரியமாக இருப்பதாக கூறினார்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள வாட்ஸ் ஆப் சேனலில் எங்களை பின் தொடரவும்

Follow on Google News

Related News
HTML tutorial
Latest News