சென்னை கோயம்பேடு சந்தையில் கடந்த மாதம் ஒரு கிலோ தேங்காய் 40 ரூபாய் முதல் 55 ரூபாய் வரை விற்பனையானது. இந்நிலையில் நேற்று தேங்காய் விலை கிடுகிடுவென உயர்ந்து, நேற்று 65 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டது.
சில்லறை விலையில் ஒரு கிலோ தேங்காய் அதிகபட்சமாக 90 ரூபாய் வரை விற்பனையானது. கனமழை மற்றும் நோய் காரணமாக உற்பத்தி பாதித்து தேங்காய் வரத்து சுமார் 300 டன் வரை குறைந்ததே தேங்காய் விலை உயர்வுக்கு காரணம் என்று வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.