ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் கிராம்புக் குடிநீர்

243
Advertisement

கொரோனா தொற்றால் அவதிப்படுவோர் உடலில்
ஆக்ஸிஜன் அளவும் குறைந்துவிடுவதாக மருத்துவர்கள்
கூறுகின்றனர்.

ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் சிலர் உயிரிழக்கவும்
நேரிடுகிறது. ஆக்ஸிஜன் பற்றாக்குறையால்
மருத்துவமனைகளில் நோயாளிகள் பலர் அவதிப்
படுவதாகவும் செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.
எனவே, தற்போது நாடு முழுவதும் ஆக்ஸிஜன்
உற்பத்தி செய்வதையும் அதுவும் எங்கெல்லாம்
முடியுமோ அங்கெல்லாம் ஆக்ஸிஜன் உற்பத்தி
செய்வதையும் மாநில அரசுகளும் மத்திய அரசும்
ஊக்கப்படுத்தி வருகின்றன.

இதுஒருபுறமிருந்தாலும், நமது உடம்பில் ஆக்ஸிஜன்
அளவை நாமே அதிகரிப்பது எப்படி என்பது குறித்துப்
பார்ப்போம்.

ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கச் செய்யும் அருமருந்தான
இந்தக் கிராம்புக் குடிநீரை நம் வீட்டிலேயே தயார் செய்யலாம்.

இதற்குத் தேவையான பொருட்கள்

ஓமம், அதிமதுரம் தலா 20 கிராம், சுக்கு, மஞ்சள்,
லவங்கப்பட்டை, கிராம்பு, மிளகு தலா 10 கிராம்
எடுத்துப் பொடிசெய்து கொள்ளுங்கள்.

இந்தப் பொடியில் ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து ஒரு
டம்ளர் அளவு தண்ணீரில் (150 மில்லி) போட்டுக்
கலக்கி பாத்திரத்திலிட்டு அடுப்பில் வைத்துக்
காய்ச்சுங்கள். இது நான்கில் ஒருபங்காக வற்றும்
வரைக் காய்ச்சுங்கள். இப்போது கிராம்புக் குடிநீர் தயார்.

இந்தக் கிராம்புக் குடிநீரை ஒரு மணி நேரத்துக்கு
ஒருமுறைவீதம் குடித்து வாருங்கள்.

சில நாட்களிலேயே உங்கள் உடலில் ஆக்ஸிஜன்
அளவு போதுமான அளவு அதிகரித்திருக்கும்.
இதற்கான கருவியைக்கொண்டு நீங்கள் வீட்டிலேயே
அறிந்துகொள்ளலாம். அல்லது உங்கள் குடும்ப
மருத்துவரை அணுகித் தெரிந்துகொள்ளலாம்.

ஆக்ஸிஜன் அளவு உடம்பில் போதுமான அளவு
உள்ளது என்பதை உறுதிப்படுத்திக்கொண்டபின்
இந்தக் கிராம்புக் குடிநீர் குடிப்பதை நிறுத்திவிடலாம்.
பல லட்ச ரூபாய் இப்போது உங்களுக்கு மிச்சம்.
அலைந்து திரிந்து ஆக்ஸிஜன் கிடைக்கவில்லையே
என்ற கவலையும் போயே போச்சு..