தெலங்கானாவில் பள்ளி கட்டிடத்தில் இருந்து குதித்து, 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலங்கானா மாநிலம் ரங்காரெட்டி மாவட்டம் ஷாத்நகரில் உள்ள பள்ளி கட்டிடத்தில் இருந்து கீழே குதித்து, 10ம் வகுப்பு மாணவன் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் நேற்று மாலை 4 மணியளவில் நடந்ததாக கூறப்படும் நிலையில், மருத்துவ சிகிச்சைக்கு பின் மாணவன் நீரஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வரும் சூழலில், யார் மீதும் வழக்குப்பதிவு செய்யபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.